தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் என்று போக்குவரத்து கழகங்களுக்கு, போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணத்தின் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பேருந்துகளில் மேற்கூரை, படிக்கட்டுகளை தொடர்ந்து கண்காணித்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்துதுறை அறிவுறுத்தியுள்ளது.

மழைக்காலத்தில் மேற்கூரை வழியே மழைநீர் வடிவது, ஜன்னல்கள் வழியே மலைச்சாரல் பேருந்துக்குள் புகுவதை தடுக்க பணிமனைகளில் முறையான பராமரிப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் போக்குவரத்துதுறை சார்பில் தற்போது புதிய அறிவுப்பு என்பது வெளியிடப்பட்டு இருக்கின்றது.

அறிவிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது தீவிரம் அடைந்திருக்கக்கூடிய நிலையில் அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள போக்குவரத்துறை சார்பில் கிளை மேலாளர்களுக்கும், மண்டலா மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல் என்பது வழங்கபப்ட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு பேருந்துகளை உரிய பராமரிப்பை உறுதி செய்யவேண்டும் என்றும், பேருந்துகளில் பொதுமக்கள் பயணித்து கொண்டிருக்கும்பொழுது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பாக பிரேக், கிளட்ச், உள்ளிட்ட அடிப்படையான போக்குவரத்து துறை அம்சங்களை அவ்வப்போது பராமரிப்பு செய்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகுக்க செய்யவேண்டும் என்றும் போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் appeared first on Dinakaran.

Related Stories: