விஜய் ஹசாரே டிராபி ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் தமிழ்நாடு

மும்பை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் கோவா அணியை 33 ரன் வித்தியாசத்திலும், அடுத்து 2வது போட்டியில் பெங்கால் அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்த பிரிவில் மத்திய பிரதேசம் 3 போட்டியில் 3 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பெங்கால், தமிழ்நாடு அணிகள் தலா 8 புள்ளிகள் பெறிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பெங்கால் 2வது இடத்தில் உள்ளது.

எனினும், அந்த அணி 3 போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் பரோடா அணியை இன்று சந்திக்கிறது. பரோடா 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. மும்பை, சரத் பவார் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நடக்க உள்ள போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

The post விஜய் ஹசாரே டிராபி ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: