ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு: 100க்கும் மேற்பட்டோர் என வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 4 பேர் சம்மந்தப்பட்டுள்ளனரா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி எதன் அடிப்படையில் வருமான வரித்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. அதிகாரிகளை தாக்கியது 100க்கும் மேற்பட்டோர் என வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 4 பேர் சம்மந்தப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பி வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கு: 100க்கும் மேற்பட்டோர் என வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 4 பேர் சம்மந்தப்பட்டுள்ளனரா?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: