17 நாள் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்படும் தொழிலாளர்கள்; சம்பவ இடத்திற்கு விரைந்த முதல்வர்: உத்தராகண்டில் பரபரப்பு

உத்தராகண்ட்: சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க இன்னும் 2 மீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது என மீட்புக்குழு தகவல் தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலார்கள் சற்றுநேரத்தில் வெளியே வருகின்றனர். மாலை 5 மணிக்குள் சுரங்கப்பாதையில் உள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாலைக்கு முன்னதாகவே தொழிலாளர்களை வெளியே அழைத்துவரும் பணி தொடங்கக்கூடும் என்றும் உத்தராகண்ட் முதல்வர் பேட்டி அளித்துள்ளார். சுரங்கப்பாதையை அடைந்துள்ள பாறைகளை அகற்றும் பணி வேகமாக நடப்பதால், மேலிருந்து கீழாக தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களை குழாய் மூலம் வெளியே அழைத்து வர கயிறு, ஏணிகள் சுரங்கப்பாதைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன.

வெளியே அழைத்து வரும் தொழிலாளர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 41 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவுடன் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேவையான ஆடைகள், பைகளை தயார் நிலையில் வைக்க உறவினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொழிலார்களை மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதைக்குள் அமைக்கபப்ட்ட குழாய் வழியாக தேசிய போரிடர் மீட்புக்குழு உள்ளே சென்றது.

The post 17 நாள் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்படும் தொழிலாளர்கள்; சம்பவ இடத்திற்கு விரைந்த முதல்வர்: உத்தராகண்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: