×

பாலியல் வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டு சிறை

 

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சின்ன பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் (62). இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக கடந்த 2016ம் ஆண்டு பணியாற்றி வந்தார். அப்போது, அந்த குடியிருப்பில் வீட்டு வேலைகளை செய்து வந்த பெண்ணின் 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்தநிலையில், மைக்கேல் மீது கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

The post பாலியல் வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Michael ,Pandi village ,Vikravandi ,Villupuram district ,Chennai ,Duraipakkam ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில்...