சேலம்: சென்னை-கோவை இடையே சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06035) இன்று முதல் வரும் ஜனவரி 30ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டைக்கு வழியாக சேலத்திற்கு காலை 11.23 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக சென்று கோவையை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கோவையில் பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே வழித்தடத்தில் வந்து சென்னைக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
The post செவ்வாய்தோறும் சென்னை-கோவை சிறப்பு வந்தே பாரத் appeared first on Dinakaran.