சென்னை: பிரபாகரன் எனக்கு பயிற்சி கொடுத்தார் என்று சீமான் பொய் சொல்கிறார் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் கொடியை பயன்படுத்துவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபாகரனை சீமான் பார்க்கவேயில்லை என்று திருமுருகன் காந்தி சென்னையில் பேட்டியளித்தார்.