×

கட்சியினருக்கு இளைஞரணி அமைப்பாளர் அழைப்பு

 

கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், திமுக நகர செயலாளர் நவாப், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் 8 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா இன்று (22ம்தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சிலையை திறந்து வைக்கிறார்.

இதில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எனவே, விழாவிற்கு வரும் அமைச்சருக்கு, மாவட்ட இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிதிரண்டு வரவேண்டும். இவ்வாறு தினேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.

 

The post கட்சியினருக்கு இளைஞரணி அமைப்பாளர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri East district ,DMK ,Dineshrajan ,Rayakottai ,Dinakaran ,
× RELATED மஞ்சள் அறுவடைக்கு முன்பதிவு