விமானங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி 2 நெய் தேங்காய் எடுத்து செல்லலாம்: கூடுதல் விமான சேவைக்கு வாய்ப்பு

சென்னை: ஐயப்ப பக்தர்கள் முழு தேங்காய்களை விமானங்களில் எடுத்து செல்ல தடை உத்தரவு அமலில் உள்ளது. இது ஐயப்ப பக்தர்களின் இருமுடிக்குள், நெய் தேங்காய் எடுத்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியா முழுவதிலும் இருந்து கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டி செல்லும்போது 2 நெய் தேங்காய் எடுத்து செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது. அதேப்போன்று இந்த ஆண்டும், ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடிக்குள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் சார்பில், இந்திய விமான நிலைய ஆணையம், மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பான டிஜிசிஏ, பிசிஏஎஸ் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்றது. இருமுடிக்குள், 2 நெய் தேங்காய்களை வரும் 2024 ஜனவரி 15ம் தேதி வரை எடுத்து செல்ல அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த சபரிமலை சீசனில், விமான நிலையத்தில் இருந்து கொச்சி செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், வழக்கமாக சென்னை கொச்சி இடையே நாள் ஒன்றுக்கு 5 விமானம் இயக்கப்பட்டதை 7 விமானங்களாக அதிகரிக்கப்பட்டன. அதைப்போல் இந்த ஆண்டும், தற்போது நாளொன்றுக்கு 5 விமானங்கள் கொச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தகுந்தார் போல் 7 அல்லது 8 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

 

The post விமானங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி 2 நெய் தேங்காய் எடுத்து செல்லலாம்: கூடுதல் விமான சேவைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: