மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பவன் நிஷாத் மீது வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் பவன் மற்றும் அவரது கூட்டாளிகள் அந்தப் பெண்ணை துன்புறுத்தி, தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கை கைவிடும்படி கேட்டு வந்தார். எனினும், அந்த பெண் பின்வாங்க மறுத்ததை அடுத்து, தெர்ஹா கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் தனது குடும்பத்தின் கால்நடைகளை மேய்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அப்பெண்ணை கோடரியால் தாக்கி படுகொலை செய்தனர்.
இதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், பவனின் சகோதரர், அசோக் நிஷாத், ஒரு தனி கொலை வழக்கில் குற்றம் உள்ளதாகவும் இளம் பெண்ணின் கொலைக்கு இரண்டு நாட்களுக்குள் முன்பு ஜாமினில் வெளிவந்ததும் தெரியவந்தது. பவன் மற்றும் அசோக் நிஷாத் தற்போது தப்பியோடி விட்டதாகவும் தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
The post 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை ஜாமினில் வெளியே வந்து வெட்டி கொலை..!! appeared first on Dinakaran.
