திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு தரிசனம் செய்ய வரும் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வது குறித்து தகவலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளை மற்றும் திட்டங்களுக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் வரை சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது.

இதில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நன்கொடையாளர்கள் ரூ.300 சிறப்பு நுழைவு கட்டண வரிசையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், நன்கொடையாளர்கள் அனைவரும் ஜெய, விஜய, துவார பாலகர்கள் சிலை வரிசை (மகா லகு தரிசனத்தில்) அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 21 முதல் 24ம் தேதி வரையிலும், டிசம்பர் 30 முதல் 2024 ஜனவரி 1ம் தேதி வரையிலும் பரிந்துரை கடிதங்களுடன் வரும் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு இல்லை.

The post திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நன்கொடையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: