மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனிநபருக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் ஊழியர்

 

மதுக்கரை, நவ.15. கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி ஊராட்சி அன்பு நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1400 விடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இதில் கோவை மாநகர பகுதியில் உள்ள குளக்கரை ஓரங்களில் வசித்து வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இங்கு குடியமர்த்தியுள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் வசதிக்காக கோயமுத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ேரஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்காமல் கேரளாவிற்கு அரிசியை கடத்தி செல்பவர்களுக்கு மூட்டை மூட்டையாக விற்பனை செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் பொருட்களை வாங்க காத்திருந்த நிலையில் அவர்களை பொருட்படுத்தாமல் பைக்கில் வந்த 2 இளைஞர்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் அரிசி மூட்டையை ஏற்றிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த ரேஷன் கடையில் எந்த பொருட்களும் எங்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. எப்போது சென்று கேட்டாலும் பொருட்கள் வரவில்லை என்று திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால் வெளிநபர்களுக்கு மூட்டை மூட்டையாக அரிசியை கொடுக்கிறார்கள். இது குறித்து கேள்வி கேட்டால் எங்களை மிரட்டுகிறார்கள். எனவே சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post மலுமிச்சம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனிநபருக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்யும் ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: