400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

கோவை, நவ.10: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் நேற்று கோவை சிங்காநல்லூர் ஒண்டிபுதூர் பாலம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சுரேஷும் கோவை நீலிக்கோணம் பாளையத்தை சேர்ந்த ராபியா என்பவரும் கூட்டாக சேர்ந்து நீலிக்கோணம்பாளையம், எஸ்எச்எஸ் காலனி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ் மற்றும் ராபியா ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இருவரும் கடத்தி வந்த 400 கிலோ ரேஷன் அரிசி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

The post 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: