தெலங்கானாவில் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: அதிகாலை 3 மணி முதல் அதிகாரிகள் அதிரடி

திருமலை: தெலங்கானாவில் முன்னாள் எம்பியும், காங்கிரஸ் வேட்பாளருமான பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை 3 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தெலங்கானா மாநில முன்னாள் எம்பி பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ். இவர் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு பாலேரு தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. இவர் இன்று(நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கம்மத்தில் உள்ள பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்ரீனிவாஸ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் என 8 இடங்களில் பெங்களூருவில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். பாஜக, பிஆர்எஸ் கட்சி இணைந்து தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். அதேபோல் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானாவில் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: அதிகாலை 3 மணி முதல் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: