பிரதமர் பட்டப்படிப்பு வழக்கு கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு

அகமதாபாத்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின்பட்டப்படிப்பு குறித்த தகவல்களை பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடக்கோரி ஒன்றிய தகவல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வழங்குவதற்கு டெல்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரதமர் பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வழங்க தேவையில்லை என்று மார்ச்சில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் பிரதமர் பட்டப்படிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முதல்வர் கெஜ்ரிவால் தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பைரன் வைஷ்ணவ் நேற்று முதல்வர் கெஜ்ரிவாலின் மறுஆய்வு மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

The post பிரதமர் பட்டப்படிப்பு வழக்கு கெஜ்ரிவால் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: