மும்பை வான்கடேவில் நாளை மோதல்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. முதல் 2 போட்டியில் இந்தியா, தென்ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அடுத்த 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நாளை வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம். இதில் ஒருவேளை தோற்றால் கூட கடைசி போட்டியில் வரும்11ம் தேதி வங்கதேசத்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த 2 போட்டியில் ஒன்றில் வென்றால் போதும்.

மறுபுறம் ஆப்கானிஸ்தான் 7 போட்டியில், இங்கிலாந்து, பாகிஸ்தான, இலங்கை, நெதர்லாந்து என 4 அணிகளை வீழ்த்தி உள்ளது. வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் அசத்தும் ஆப்கன் நாளை ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாளை மற்றும் 10ம்தேதி கடைசி போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தினால் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம். இரு அணிகளும் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் மோதியதில் அனைத்திலும் ஆஸ்திரேலியா தான் வென்றுள்ளது. இதில் 2015, மற்றும் 2019 உலக கோப்பை போட்டிகளும் அடங்கும்.

The post மும்பை வான்கடேவில் நாளை மோதல்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? appeared first on Dinakaran.

Related Stories: