தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பிளாஸ்டிக் கேன் மூலம் சொட்டு நீர் பாசனம்

 

வாலாஜாபாத், நவ.5: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பழவகை மற்றும் மூலிகை செடிகளை வளர்க்கும் வகையில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமாரின், புது முயற்சியால் பிளாஸ்டிக் கேன்களின் மூலம் சொட்டு நீர் பாய்ச்சப்படுகிறது. வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள வீடுகளில் நாள்தோறும் சுழற்சி முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கிராம மக்கள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் வீடுகளில் பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை வெளியில் வீசி விடாமல், தூய்மை பணியாளர்களிடம் மக்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் குறும்காடு வளர்த்தல், மூலிகை செடி வளர்த்தல், பழவகை மரங்கள் வளர்த்தல் என பல்வேறு பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏக்கர் இடங்களில் இப்பணி முழு வீச்சாக நடைபெற்று வருகிறது.

மேலும் இங்கு வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமாரின், புது முயற்சியாக வீடுகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை, பழவகை செடிகள் மற்றும் மூலிகை செடிகளின் அருகாமையில் ஒரு குச்சியில் கட்டி வைத்து, இதில் நீர் ஊற்றி அதன் வழியாக சொட்டுநீர் பாசனம் போல நாள்தோறும் சொட்டு சொட்டாக நீர் செலுத்தப்பட்டு, செடிகளின் வேர்களில் நீர் பதம் எந்நேரமும் இருக்கும் வகையில் 100 நாள் வேலை திட்ட பணி செய்யும் கிராம மக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவகிறது.

The post தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பிளாஸ்டிக் கேன் மூலம் சொட்டு நீர் பாசனம் appeared first on Dinakaran.

Related Stories: