கைது செய்யப்பட்டதாக கூறி போலி வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்கு: மும்பை போலீஸ் அதிரடி


மும்பை: தான் கைது செய்யப்பட்டதாக கூறி போலி வீடியோ தயாரித்து வெளியிட்ட நடிகை உர்ஃபி ஜாவேத் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத், பொது இடங்களில் ஆபாசமான ஆடைகளை அணிந்து வந்த விவகாரம் தொடர்பாக அவரை மும்பை போலீசார் கைது செய்ததாக நேற்று பரபரப்பு செய்தி வெளியானது. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து போலி கைது வீடியோ தயாரித்து வெளியிட்ட உர்ஃபி மீது மும்பை காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நடிகை உர்ஃபி ஜாவேத் மீது ஐபிசியின் 171, 149, 500, 34 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. காவல் துறை ஊழியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி கைது வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளார். உர்ஃபி-யுடன் அவரது கூட்டாளிகள் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போலி போலீஸ் வேடத்தில் நடித்த பெண்களும் கைது செய்யப்படுவார்கள். மேலும், வீடியோவுக்கு பயன்படுத்திய போலி போலீஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

The post கைது செய்யப்பட்டதாக கூறி போலி வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்கு: மும்பை போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: