ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு


புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத்துடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் தீவிரவாதம், பாதுகாப்பு நிலைமை, மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதித்தனர்.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடு குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தி பேசினர். மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து விவாதித்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத்துடன், பிரதமர் மோடி பேசியது முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது.

The post ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: