வாடகை கட்டிடத்தில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் அமைக்கப்படும்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உறுதி

 

ராஜபாளையம், நவ.4: ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சியில் கீழவரகுணராமபுரம் கிராமத்தில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை தனுஷ் எம்.குமார் எம்பி, தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தெற்கு வெங்கநல்லூர் கிராமம் மற்றும் கம்மாப்பட்டி கிராமத்தில் தலா ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் அமைக்க பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சொந்த கட்டிடம் அமைக்கப்படும் என தங்கப்பாண்டியன் எம்எல்ஏ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ராமமூர்த்தி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஊராட்சி மன்ற தலைவர் பழனி, கிளைச் செயலாளர்கள் கருப்பையா, பால்ராஜ், கோவிந்தராஜ், ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post வாடகை கட்டிடத்தில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் அமைக்கப்படும்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: