கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்றதாக மொத்தம் 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா எல்லையை கடக்க முயன்றதாக 30,010 இந்தியர்களும், மெக்சிகோ எல்லையை கடக்க முயற்சித்த 41,770 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மைனருடன் வருபவர்கள், குடும்ப பிரிவில் உள்ள நபர்கள், தனியாக வரும் வயதானவர்கள் மற்றும் துணையில்லாமல் வரும் சிறுவர்கள் என்று 4 வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தனியாக வரும் வயதானவர்கள் 2023ம் நிதியாண்டில் 84,000 பிடிபட்டுள்ளனர்.
* 5 மடங்கு அதிகம்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்று கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்ட 96,917 இந்தியர்களில் 30,010 பேர் கனடா எல்லையிலும், 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் வெவ்வேறு எல்லைகளின் வழியாக ஊடுருவியவர்கள் ஆவர். முந்தைய ஆண்டுகளை காட்டிலும் தற்போது ஐந்து மடங்கு அதிகமாக ஊடுருவல் நடந்துள்ளது. நாட்டிலேயே குஜராத், பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.
The post அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் கைது appeared first on Dinakaran.
