வாலாஜாபாத் ஒன்றிய குழு கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார், துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான சிமென்ட் சாலை, குடிநீர் வசதி, தார்சாலை உள்ளிட்டவை குறித்து கவுன்சிலர்களிடையே விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், பழையசீவரம் ஊராட்சி சங்கராபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் 2 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டுதல், சிறுவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி மற்றும் அகரம் ஊராட்சியில் 1,500 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க பைப் லைன் அமைத்தல், ஒழையூர் ஊராட்சியில் பெருமாள் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ஐயம்பேட்டை ஊராட்சி வடக்கு தெரு, சக்தி அம்மன் தெரு பகுதிகளில் தார்சாலை அமைத்தல், புத்தகரம் ஊராட்சியில் முருங்கை நர்சரி அமைத்தல், கூத்திரம்பாக்கம் கிராமத்தில் இருந்து இலுப்பப்பட்டு வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் புதிய கல்வெட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத் ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: