ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹமாஸ் தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை : அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்

வாஷிங்டன் : பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் மூண்டது. போர் நடந்த 3 வாரங்களில் 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் முறையாக நேற்று முன்தினம் ரபா எல்லை திறக்கப்பட்டு வெளிநாட்டு பாஸ்போர்ட்டுடன் இருந்த 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேல் தரைவழிப்படைகள் நேற்று காசாவை நோக்கி மேலும் முன்னேறின.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி பிளிங்கன்,”பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது.ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹமாஸ் தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை. தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கர்கள் குறித்தும் பிணைக்கைதிகளாக சிலர் பிடிபட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்தும் உண்மைதன்மையை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.அமெரிக்கர்கள் யாராவது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார். இதனிடையே, இஸ்ரேலுக்கு கூடுதல் வெடி மருந்துகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

The post ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹமாஸ் தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை : அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் appeared first on Dinakaran.

Related Stories: