தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு மேலாக ஆடு விற்பனை

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு மேலாக ஆடு விற்பனை ஆகியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் பெருநகர பகுதிகளில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தையாக கருதக்கூடிய திருமங்கலத்தில் உள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆடுகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும் இந்த நிலையில் வருகிற தீபாவளி பண்டிகை ஒட்டி 10 நாட்களுக்கு முன்பே ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டு சந்தையில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆடுகள் இங்கு விறபனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 5 இடை கொண்ட ஆடுகள் முதல் 30 கிலோ எடை கொண்ட ஆடுகள் வரை விற்பனைக்கு விற்கப்பட்டுள்ளன. ரூ. 15,000 ஆடுகள் முதல் ரூ. 35,000 ஆடுகள் வரை இங்கு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன நிலையில் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் ஆடு கடை விற்பனையாளர்கள் பெரும் அளவில் வாங்கி செல்லும் வகையில் அசைவ பிரியர்களும் இன்று முதலே வாடிக்கையாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஆடுகளை வாங்கி செல்லுகின்றனர். தீபாவளி பண்டிகை 10 தினங்களுக்கு மேல் உள்ள நிலையில் இன்று முதலே ஆட்டு சந்தையில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு மேலாக ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: