தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்ய பாஜக அரசு சதித்திட்டம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார். டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று ஆஜராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக டெல்லி மாநில கல்வி அமைச்சர் அதிஷி மர்லினா கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்க மத்தியில் ஆளும் பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். பொது தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்து காலியாக உள்ள நாட்டில் தாங்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் பாஜாகவினர் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே 2014ம் ஆண்டில் இருந்து விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளில் 95% எதிர்க்கட்சி தலைவர்கள் மீதுதான் தொடரப்பட்டு இருப்பதாக ஆம்.ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் சத்தா தெரிவித்துள்ளார்.

The post தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்ய பாஜக அரசு சதித்திட்டம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: