புதுடெல்லி: கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல்,1.72 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வசூலானதை விட 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியாகும். கடந்த ஏப்ரலில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது. அக்டோபரில் அதிகபட்ச தொகையாக ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இந்தாண்டில் 2வது முறையாக வசூல் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி சராசரியாக ரூ.1.66 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி appeared first on Dinakaran.
