குருடம்பாளையம் ஊராட்சியில் ரூ2.87 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

 

பெ.நா.பாளையம், நவ.1: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட குருடம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.20 லட்சத்து 47 ஆயிரம், எல்பிஎ நிதியில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரம், 15வது நிதிக்குழு மானியம் ஊராட்சி சார்பில் ரூ.40 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து 78 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் ரவி தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் நர்மதா துரைசாமி முன்னிலை வகித்தார். கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீதேவி நகரில் நடைபெற்ற பூமி பூஜையில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பெரியநாயக்கன்பாளையம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, டியூகாஸ் துணை தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், திமுக வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குருடம்பாளையம் ஊராட்சியில் ரூ2.87 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: