4.5 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம் இந்தாண்டுக்குள் மேலும் 5 லட்சம் பாஸ்போர்ட்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவிந்தன் தகவல்

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று சென்னை, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பங்குதாரர்களுடன் பல்வேறு வகையான விளையாட்டில் வெற்றி பெற்றவர்ளுக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவிந்தன் பேசியதாவது: பாஸ்போர்ட் வழங்கும் பணி வாரத்திற்கு 5 நாட்கள் நடக்கிறது. பாஸ்போர்ட் சரிபார்க்கும் பணியில் போலீசார் விரைந்து செயல்படுவதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4.5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முடிவதற்குள் 5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்படும்.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் மக்களுக்கு பாஸ்போர்ட் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு முன்அனுமதியும் ெபறாமல் பொதுமக்கள் மண்டல உயர் அதிகாரிகளை மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் சந்திக்கலாம். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டை விரைவாகவும், எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்குவதை தங்களுடைய பிரதான பணிகளாக கொண்டுள்ளனர் என்றார்.

The post 4.5 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம் இந்தாண்டுக்குள் மேலும் 5 லட்சம் பாஸ்போர்ட்: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவிந்தன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: