சிருஷ்டி டாங்கே ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

புத்தம் புது காலை.. பொன்னிற வேலை.. என்ற பாடலில் தென்றலாய் வந்து ரசிகர்களின் மனதை மயக்கியவர் கன்னக்குழியழகி சிருஷ்டி டாங்கே. சிருஷ்டி தமிழ் சினிமாவில் அறிமுகமானது 2010ம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தில். அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். தற்போது, சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சிருஷ்டி தனது பிட்னெஸ் ரகசியத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

வொர்க்கவுட்ஸ்: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிட்னெஸ் மிக முக்கியம். அதனால் வொர்க்அவுட்டில் நான் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. அதிகாலையே எழுந்துவிடுவேன். அரை மணி நேரம் யோகா, அரை மணி நேரம் நடைபயிற்சி அதன்பின் சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்வேன். அதில் ஸ்ட்ரெச்சிங், கார்டியா பயிற்சிகள், பைலேட்ஸ், புஷ்அப், புல் அப், கரன்ச்ஸ், ஸ்குவாட் , சைக்கிளிங் போன்றவை இருக்கும். இது தவிர, குறைந்த பட்சம் அரை மணியிலிருந்து 1 மணி நேரம் வரைடான்ஸ் பிராக்டீஸ் செய்வேன்.

நன்றாக உடலை வளைத்து நடனமாடும்போது உடலின் தேவையற்ற கலோரிகள் கரைகின்றன என்பதால் நடனமாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதுபோன்று குறைந்தது ஒருநாளைக்கு 10 மணி நேரம் வரை தூங்குவேன். பிட்னெஸில் மிக முக்கியமானது தூக்கம். தினசரி நன்றாக தூங்கி எழுந்தால்தான் உடலை ஆரோக்கியமாக ஃபிட்டாக வைத்திருக்க முடியும்.

டயட்: பிட்னெஸ் எனும் போது உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதுபோன்ற உணவும் முக்கியம் இரண்டும் சரியாக இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்கும். பொதுவாகவே எங்கள் வீட்டில் ஆரோக்கியமான உணவுகளே அதிகம் இருக்கும். அதிலும், நான் நடிகையான பிறகு, உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன். காலை உணவாக, குறைந்த கொழுப்பு தன்மையுள்ள பால் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு மற்றும் வெஜிடபிள் சான்வெட்ஜ் எடுத்துக் கொள்வேன்.

மதியத்தில், ஃபிரஷ்ஷான காய்கறிகள், கிரீன் சாலட், கொஞ்சமாக அரிசி சாதம், ரொட்டி மற்றும் தயிர் கட்டாயம் எடுத்துக் கொள்வேன். மாலையில் ஒரு காபி அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு கொஞ்சமாக நட்ஸ் மற்றும் ட்ரைஃப்ரூட்ஸ் எடுத்துக் கொள்வேன். இரவில் மீண்டும் காய்கறிகள், சப்பாத்தி, கிரீன் சாலட், பழங்கள், பால் அல்லது சூப் அல்லது ஸ்மூத்தி, முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். அதுபோன்று இரவில் எப்போதும், 8 மணிக்குள் டின்னரை முடித்துவிட்டு சிறிது நேரம் நடைபயிற்சி செய்துவிட்டு பின் தூங்கச்
செல்வேன்.

பியூட்டி : பொதுவாக நான் இயற்கையான அழகுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால், பெரும்பாலும் நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் எல்லாமே ஆர்கானிக்காகவே இருக்கும்.

தோல் பராமரிப்பு. நமது தோல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருந்தாலே மென்மையாகவும், இயற்கையான பளபளப்புடனும் காட்சியளிக்கும். நான் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது.

தக்காளிச்சாறு, கற்றாழை போன்றவற்றை முகத்துக்கு பயன்படுத்துவேன். அதுபோன்று படுக்கைக்குச் செல்வதற்கு முன் மேக்கப் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிய பின்பே தூங்கச்செல்வேன்.

அதுபோன்று, இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தடவிவிட்டுத்தான் தூங்கச் செல்வேன், அதுபோன்று முடியின் ஈரப்பதத்தை காப்பதற்கு கண்டிஷனர்கள் மற்றும் ஆன்டி-ஃபிரிஸ் சீரம்களைப் பயன்படுத்துவேன். அதுபோன்று, வீட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு ஹேர் ஆயில்களை பயன்படுத்தி மாதத்திற்கு ஒருமுறை ஹேர் ஸ்பா செய்து கொள்வேன். இவைகள்தான் எனது பிட்நஸ் மற்றும் அழகு ரகசியங்கள் ஆகும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post சிருஷ்டி டாங்கே ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! appeared first on Dinakaran.

Related Stories: