கேரளா குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டத்தில் பயங்கர வெடி விபத்துகள் நடந்துள்ளது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை நிகழ்வுகள் அது எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயங்கரவாத நடவடிக்கையின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கேரளா குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: