மாதவரம் மண்டலத்தில் ரூ.88 லட்சத்தில் தார்ச்சாலை

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் மண்டலம் 27 வது வார்டு பேங்க் காலனி 1 முதல் 5வது தெரு மற்றும் பேங்க் காலனி பிரதான தெரு, ஜானவாஸ் தெரு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்த நடந்து செல்லக்கூட முடியாதபடி காணப்பட்டது. இதனால் இந்த சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். மேலும் இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் சந்திரன், மண்டலகுழு தலைவர் நந்தகோபாலிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட 7 தெருக்களில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.51 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.88 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து கவுன்சிலர் சந்திரன் தலைமையில் மண்டல உதவி ஆணையர் சின்னதுரை, உதவி பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் சாலைகள் போடப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டது.

The post மாதவரம் மண்டலத்தில் ரூ.88 லட்சத்தில் தார்ச்சாலை appeared first on Dinakaran.

Related Stories: