இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறியதாவது: தற்போது பூந்தமல்லி முதல் போரூர் நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, அதாவது சாலை சீரமைப்பு பணிகள் 75% நிறைவடைந்துள்ளது. ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 87% சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. அதேப்போல மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 65% சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ராஜிவ்காந்தி சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனடியாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகள் சேதமடைந்தால் விரைந்து சீரமைக்கப்படும்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.