தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் தலைமை செயலகத்தில்இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்காளர் இறுதி பட்டியல் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி (நாளை மறுதினம்) வெளியிடப்படுகிறது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், இன்று (25ம் தேதி) சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள 2வது மாடியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட 9 அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் இரண்டு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இன்று நடைபெறும் கூட்டத்தில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கள்ள ஓட்டு போடுவதை முற்றிலுமாக தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அரசியல் கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

The post தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் தலைமை செயலகத்தில்இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்காளர் இறுதி பட்டியல் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: