நாடு முழுவதும் 765 மாவட்டங்களில் மோடி அரசை விளம்பரப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதா?.காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்

புதுடெல்லி: அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்,மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசின் உத்தரவு நகலை இணைத்து டிவிட்டரில் கார்கே நேற்று பதிவிடுகையில், ‘மோடி அரசின் 9 ஆண்டு சாதனையை விளக்குவதற்கு நாடு முழுவதும் 765 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க நிதி அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இணை செயலாளர், இயக்குனர்,துணை செயலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது சிவில் சர்வீஸ் விதிகள் 1964- ன் பிரிவை மீறுவதாகும். குறிப்பிட்ட அந்த விதியின்படி அரசியல் விஷயங்களில் அதிகாரிகள் தலையிடக்கூடாது. அரசின் திட்டங்களை கொண்டாடுவது மற்றும் அதனை காட்சிப்படுத்துவது கட்சி தொண்டர்களின் பணியாகும். இந்த பணிக்கு அதிகாரிகளை அனுப்பினால் அடுத்த 6 மாதங்களுக்கு அரசு இயந்திரம் முடங்கி விடும். ஜனநாயகத்தையும்,அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க இந்த உத்தரவுகளை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

The post நாடு முழுவதும் 765 மாவட்டங்களில் மோடி அரசை விளம்பரப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதா?.காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: