பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

டெல்லி : பிரதமர் மோடி அவர்கள் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவம் மூலம் பலருக்கு நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்! அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும், அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள்’ என பதிவிட்டுள்ளார்.

The post பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..! appeared first on Dinakaran.

Related Stories: