‘ஜெய்ராம்’ கோஷம் மத உணர்வு சார்ந்தது அல்ல

புதுச்சேரி, அக். 18: ெஜய்ராம் கோஷம் மத உணர்வு சார்ந்தது அல்ல என கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். குஜராத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரரை பார்த்து ெஜய்ராம் என ரசிகர்கள் கோஷம் எழுப்பியது ெதாடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறப்பு விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், அப்துல்கலாம் எழுதிய சுயசரிதையில், விண்கலம் மேல் எழும்போது தலைமை விஞ்ஞானி முதற்கொண்டு சாதாரண ஊழியர் வரை எல்லோரும் வந்தே மாதரம் என கோஷம் எழுப்பினர். வெற்றி என்று வரும் போது அதன் உள்ளுணர்வோடு கூறியிருப்பதாக கூறியுள்ளார். ஜெய்ராம் என்று கூறி நமது நாட்டின் வெற்றியை குறிக்கும்போது மதம் இருந்ததாக பார்க்கவில்லை. வெற்றி உணர்வு இருந்ததாக மட்டுமே பார்க்கிறேன்.

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவிகள் ஏன் போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை. சமீபத்தில் முன்னாள் யூஜிசி சேர்மனை நான் சந்தித்தபோது, இப்படிப்பட்ட கொள்கையை பார்த்ததே இல்லை. கல்வியை எளிதாக கற்கும் வகையில் உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் என பல வழிகள் இருக்கிறது என்று கூறினார். மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு புரியவைப்பேன். போராட்டம் நடத்தும் அளவுக்கு புதிய கல்வி கொள்கையில் எதிர்மறையாக எதுவும் இல்லை. கல்வி கொள்கை மூலம் வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளை உலக அரங்குக்கு கொண்டு செல்ல இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பல லட்சம் மக்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துவோர் என கருத்து கேட்டுத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. புரிதல் இல்லாமல் போராட்டம் நடத்துகிறார்கள். மோடி ஆட்சியில் எந்த தாய் மொழிகளுக்கும் பங்கமும் வந்துவிடாது, என்றார்.

The post ‘ஜெய்ராம்’ கோஷம் மத உணர்வு சார்ந்தது அல்ல appeared first on Dinakaran.

Related Stories: