ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 நாட்கள் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

ஓட்டப்பிடாரம், அக்.17: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளோர் நலன் கருதி வரும் அக்டோபர் 19, 20ம் தேதி ஆகிய இரு தினங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் மற்றும் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலரான ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் நலன் கருதி அவர்களின் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம், தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர் மற்றும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் அக்டோபர் 19ம் தேதி சிலுவைப்பட்டியில் உள்ள ஆர்சி துவக்க பள்ளியிலும், அக்டோபர் 20ம் தேதி பேரூரணி ராஜாராம்நகர் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மேற்கண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான படிவங்களை அங்கு வரும் தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் நேரில் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 நாட்கள் நடக்கிறது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: