கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

 

விருதுநகர், அக்.17: விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை கலெக்டர் துவக்கி வைத்தார். முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றி சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளையும், கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும், விவசாயிகளுக்கு கால்நடை தீவன பயிர்களையும், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவையினையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: