இஸ்ரேல் – லெபனான் எல்லையில் இந்திய அமைதி படை மீது ராக்கெட் தாக்குதல்


ஜெருசலேம்: இஸ்ரேல் – லெபனான் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய அமைதி படை மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய பின்னர், லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போருக்கு இடையே, இஸ்ரேல் – லெபனான் எல்லையில் இந்திய அமைதி காக்கும் படையினர் பணியாற்றி வருகின்றனர்.

தெற்கு எல்லையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இதுகுறித்து லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி, ஐ.நா தலைமைத் தளபதி அர்னால்டோ லாசாரோவுடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் – லெபனான் எல்லையில் இந்திய அமைதி படை மீது ராக்கெட் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: