காத்திருப்போர் பட்டியலில் இருந்த திஷா மிட்டல், போலீஸ் தொழில் நுட்பப் பிரிவு டிஐஜியாகவும், வடசென்னை போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த அபிசேக் தீக்சித், வடசென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜியாகவும், திருவாரூர் எஸ்பியாக இருந்த சுரேஷ்குமார், தென்காசி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சாம்சன், மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்பியாகவும், நீலகிரி எஸ்பியாக இருந்த பிரபாகர், கரூர் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எஸ்பியாக இருந்த ஹரிகிரன் பிரசாத், ராமநாதபுரம் கடலோர காவல்படை எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த சுந்தரவடிவேல், நீலகிரி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபா சத்யன், நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் உள்பட 16 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.