கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி

 

கோவை, அக்.11: கோயம்புத்தூர் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியினை கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முன்னதாக ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் விஜயகணேஷ், துணைப்பதிவாளர் வரவேற்று பேசினார். நிகழ்வில் மேலாண்மை நிலையத்தின் விரிவுரையாளர்கள், பணியாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் முதுநிலை ஆய்வாளர் விரிவுரையாளர் அர்சு ஜபீன் நன்றி கூறினார்.

The post கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: