தெலங்கானாவில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும்: அடிலாபாத்தில் அமித்ஷா பேச்சு

திருமலை: தெலங்கானாவில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று அடிலாபாத்தில் அமித்ஷா பேசினார். தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நேற்று பாஜக ஜனகர்ஜனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தெலங்கானாவில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமையும். டிசம்பர் 3ம் தேதி ஐதராபாத்தில் பாஜக கொடி பறக்க விட வேண்டும். தெலங்கானாவில் இரட்டை என்ஜின் ஆட்சி வருவதற்கான நேரம் வந்துவிட்டது. தெலங்கானாவை கே.சி.ஆர். போன்ற நவீன ராஜாக்களிடமிருந்து பாஜகவால் மட்டுமே காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* கருப்பு பலூன்களுடன் எதிர்ப்பு
அடிலாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமித்ஷாவின் கான்வாயை இந்திய சிமெண்ட் நிறுவன தொழிலாளர்கள் கருப்பு பலூன்களுடன் வந்து தடுக்க முயன்றனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக சிசிஐயை மூடக் கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தி் ஈடுபட்டனர். போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

The post தெலங்கானாவில் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும்: அடிலாபாத்தில் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: