வடுவூர் சாத்தனூரில் நீர் பாசனத்தில் புதிய யுக்தி ‘வயல் நீர் குழாய்’ விழா

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் “வயல் நீர் குழாய்” பற்றிய வயல் விழா நடைபெற்றது.இங்கு உள்ள நெல் வயல்களில் விவசாயிகள் வயல் நீர் குழாய் அமைத்து நீரின் தேவையை குறைத்து நெல் சாகுபடி செய்வதனால் நெற்பயிரில் தூர்கள் அதிகமாக வெடித்து மேலும் தண்ணீர் கட்டும் போது வயல் நீர் குழாய்கள் மூலம் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையை பின்பற்றுவதனால் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு நல்ல மகசூல் பெறுவதற்கு வழி வகை செய்கிறது.

இந்த வயல் விழாவில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கருணாகரன் வயல் நீர் குழாய் பற்றிய தொழில்நுட்ப விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வயல் விழா நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெரியார் ராமசாமி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் அருள்செல்வி, இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம்) மற்றும் ராஜகுரு வேளாண்மை அலுவலர் காஞ்சிகுடிக்காடு அரசு விதை பண்ணை ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் வடுவூர், சாத்தனூர் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

The post வடுவூர் சாத்தனூரில் நீர் பாசனத்தில் புதிய யுக்தி ‘வயல் நீர் குழாய்’ விழா appeared first on Dinakaran.

Related Stories: