மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மேம்படுத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

 

கோவை, அக். 10: கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தனியார் வீடுகளிலும், கட்டிடங்களிலும், தொழிற்சாலைகளிலும், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றிலும் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அவைகளை உடனடியாக சரிசெய்து நல்ல முறையில் இயங்கும் நிலையில் பராமரிக்க வேண்டும்.

அதேபோல், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் இருப்பின், அவைகளை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற வடகிழக்கு பருவமழை காலத்தில், நமது மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் அதிகளவு மழைநீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தவும் பொதுமக்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மேம்படுத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: