ஹாங்காங்கை நெருங்கும் கொய்னு சூறாவளி புயல்… மணிக்கு 144 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!!

ஹாங்காங் : ஹாங்காங்கை நெருங்கி வரும் கொய்னு என்ற சூறாவளி புயல் காரணமாக அங்கு கனமழையும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இன்று ஹாங்காங்கின் சில இடங்களில் மணிக்கு 144 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தைவானை துவம்சம் செய்த கொய்னு புயல், தற்போது சீனாவின் ஹாங்காங் நகரை நெருங்கி வருகிறது. இதனால் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக சீற்றமாக உள்ளன. ஹாங்காங்கில் பலத்த காற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த சூறாவளி காற்று ஹாங்காங்-ஐ தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 144 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. கொய்னு என்றால் ஜப்பான் மொழியில் நாய்குட்டி என்று பொருள்படும். இந்த சூறாவளி புயல் கடந்த வாரம் தைவானை பதம் பார்த்ததோடு, சீனாவின் சில பகுதிகளிலும் பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. தைவானில் வீசிய சூறாவளி காற்றால் 400 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஹாங்காங்கை நெருங்கும் கொய்னு சூறாவளி புயல்… மணிக்கு 144 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: