பிரதேச ராணுவத்தில் சீன மொழி வல்லுனர்கள் 5 பேர் நியமனம்

புதுடெல்லி: டெரிடோரியல் ஆர்மி(டிஏ) எனப்படும் பிரதேச ராணுவம் கடந்த 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிக வயது காரணமாக ராணுவத்தில் சேர முடியாத இளைஞர்களுக்கு நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பிரதேச ராணுவம் வழங்கி வருகிறது. பிரதேச ராணுவம் தொடங்கப்பட்டு 75வது ஆண்டை எட்டி உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,‘‘ பிரதேச ராணுவத்தில் சீன மாண்டரின் மொழி வல்லுனர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே எல்லையில் நடக்கும் பேச்சுவார்த்தையின் போது, இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மாண்டரின் மொழி வல்லுனர்கள் உதவியாக இருப்பர். அதே போல் சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

The post பிரதேச ராணுவத்தில் சீன மொழி வல்லுனர்கள் 5 பேர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: