லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தல் காங்.-தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி: பாஜ படுதோல்வி

கார்கில்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.பாஜ படுதோல்வியடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்த லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. இதில், 30 உறுப்பினர்களை கொண்ட லடாக் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 4 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். தேர்தலில், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தனித்தனியாக போட்டியிட்டன.

பாஜ கட்சி வலுவான இடங்களில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதில்,தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வெறும் 2 இடங்களை பெற்று பாஜ படுதோல்வி அடைந்தது. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றனர். லடாக் யூனியன் பிரதேசமான பிறகு நடந்த முதல் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தல் காங்.-தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி: பாஜ படுதோல்வி appeared first on Dinakaran.

Related Stories: