வளர்ச்சி பணி நிறைவேற்ற ரூ.1 கோடியே 26 லட்சம்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒதுக்கீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மாணிக்கம், மேலாளர் (நிர்வாகம்) விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், எஸ்.வேலு, ஆர்.சங்கீதா ராஜி, கே.விமலா குமார், செல்வராணி ஜான், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், சாந்தி தரணி, கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், ஷகிலா ரகுபதி, விமலா, வழக்கறிஞர் வ.ஹரி, கிருபாவதி தியாகராஜன், பொற்கொடி சேகர், திலீப்ராஜ், நவமணி கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 15வது நிதி குழு மானியத்தின் மூலம் 21- 22 மற்றும் 22-23 ஆகிய வருடங்களில் ஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெபபாலன் அறிவுறுத்தினார். ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றிய கவுன்சிலர்களின் பகுதிகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் கால்வாய், தெருவிளக்கு வசதி உள்பட அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்ற ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.7 லட்சம் வீதம் 18 கவுன்சிலர்களுக்கும் ரூ.1 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தெரிவித்தார்.

The post வளர்ச்சி பணி நிறைவேற்ற ரூ.1 கோடியே 26 லட்சம்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: