கலைஞர் நூற்றாண்டு விழா மயிலேரிபாளையம் ஊராட்சியில் பந்தயத்தில் பாய்ந்த குதிரைகள்

 

மதுக்கரை, அக்.8: கோவையை அடுத்த மயிலேரிபாளையம் ஊராட்சி திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குதிரை பந்தயம் நேற்று நடைபெற்றது. மயிலேரிபாளையத்தில் இருந்து ஏலூர் பிரிவு செல்லும் சாலையில் நடைபெற்ற இப்போட்டி துவக்க நிகழ்வுக்கு திமுக கிளை செயலாளர் திருமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி, துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பந்தய போட்டிகளை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் கோவை, சூலூர், பல்லடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 குதிரைகள் கலந்து கொண்டன. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த குதிரை பந்தயத்தில் குதிரைகள் சீறி பாய்ந்தன. இன்று காலை அதே இடத்தில் ரேக்ளா போட்டி நடக்க இருக்கிறது. இப்போட்டிகளை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை மயிலேரிபாளையம் திமுக கிளை செயலாளர் திருமூர்த்தி செய்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா மயிலேரிபாளையம் ஊராட்சியில் பந்தயத்தில் பாய்ந்த குதிரைகள் appeared first on Dinakaran.

Related Stories: