குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

 

குளித்தலை, அக்.6: நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட சார்பில் எங்களுக்காக அல்ல உங்களுக்காக நலமான இளைஞர்களும் வளமான பாரதமும் ஒரு வார கால சிறப்பு முகாம் குளித்தலை நகரம் கடம்பர் கோவில் நாப்பபாளையம் ஆகிய பகுதியில் 5 நாட்கள்கள் நடைபெற்றது. ஒருவார காலம் நடைபெற்ற முகாமில் மரக்கன்று நடுதல், ஆலய உழவாரப் பணி, சாலை மேம்பாடு, பள்ளி வளாக தூய்மை, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சூழல் விழிப்புணர்வு ஆகிய களப்பணிகளும் நடைபெற்றது.

தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகளாக யோகா மற்றும் விளையாட்டு, சாலை பாதுகாப்பு நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, உயர்கல்வி வழிகாட்டுதல் சிறுசேமிப்பின் பயன்கள், கொசு ஒழிப்பு டெங்கு ஒழிப்பு, பக்தி மூலிகை மருத்துவம் கணினி உலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகாமின் இறுதி நாளான நேற்று முகாம் நிறைவு விழா கடம்பர்கோவில்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட உதவி அலுவலர் கல்பனா வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்னலட்சுமி முகம் நிறைவு திட்ட அறிக்கை வாசித்து நன்றி உரையாற்றினார். கடம்பர் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி ஆசிரியை சரோஜாதேவி, தாமரைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: